திருவாடுதுறை ஸ்ரீ அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
திருவாடுதுறையில் மிக பழைமையான அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம் திருவாவடுதுறை ஆதினகர்த்தர் முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது திருவாவடுதுறை. இங்கு திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மிக பழைமையான அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் ஆலயம் அமைத்துள்ளது.
இந்த ஆலய மகா கும்பாபிசேகத்தையொட்டி யாகசாலை அமைத்து புனித நீர் கடங்கள் வைத்து கடந்த 14 ந்தேதி கனபதி ஹோமம் நடத்தி நான்கு கால பூசைகள் நடைபெற்று இன்று நான்காவது யாக பூஜை நடைபெற்று பூர்னா குதி நடைபெற்றது. பின் சிவாச்சாரியார்கள் புனித நீர் கடங்களை தலையினில் தாங்கி, வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கடங்கள் விமானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
பின் திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி கடங்களில் உள்ள புனித நீரை விமான கலசத்தில் ஊற்றி கோயில் மகா கும்பாபிசேகம் சீரும் சிறப்பு மாக நடைபெற்றது.. இக் கும்பாபிசேகத்தை ஆயிரக்கனக்கான பக்தர்கள் கண்டு விநாயகரின் அருளை பெற்றனர்.