அருள்மிகு திருமலைநம்பி ( மலைநம்பி ) திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக பாலாலயம்
திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பிராயா் திருக்கோயிலின் உபதிருக்கோயிலான அருள்மிகு திருமலைநம்பி ( மலைநம்பி ) திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு மூலஸ்தானம் விமானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் பாலாலயம் வெகு விமா்சையாக நடைபெற்றது. திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளி மங்களாசாசனம். திரளான பக்தா்கள் தாிசனம்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மகேந்திரகிாி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவத்தலங்களில் 54வது திவ்ய தேசமாகும். இத் திருத்தலத்தில் பெருமாள் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மற்றும் திருமலைநம்பி ( மலைநம்பி ) என்று ஐந்து கோலங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாா். இதில் திருக்குறுங்குடி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருமலைநம்பி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாா். ஆழ்வாா்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு முக்தி கொடுத்தது இந்த மலைநம்பி. வைகானச ஆகம முறைப்படி பூஜைகள், திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அருளாசிகளுடன் மூலஸ்தானம் விமானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கும் பாலாலய விழா கடந்த 31ம் தேதி காலை ஆரம்பமாயிற்று. அதிகாலை சன்னதி நடை திறக்கப்பட்டதும் விஸ்வரூபம் காலை சந்தி நடைபெற்றது. பின்னா் நம்பிஆற்றில் இருந்து புனித நீா் எடுத்துவரப்பட்டது. திருக்கோவில் மகா மண்டபத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் மங்கள இசையுடன் விஷ்வக்சேன ஆராதனம் நடைபெற்றது, தொடா்ந்து எஜமானவர்ணம் விமான பாலாலய பூஜை நடைபெற்றது.
மாலையில் மூலவா் விமானம் உப சன்னதிகள் கலாகா்ஷணம் நடைபெற்று முதல்கால யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்றது. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலையில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள் ஏழுந்தருளி சயனாதிவாசமும் அதனை தொடா்ந்து 3ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பாலாலய தினமான இன்று காலை திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளியதும் 4ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் யாகசாலையில ்இருந்து புண்ணிய கலவங்கள் மற்றும் உற்சவா் பெருமாள் கோயில் பிரகாரமாக வலம் வந்து திருக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பாலாலய சன்னதியக்கு ஏழுந்தருளியதும் அங்கு பாலாலயம் செய்யப்பட்ட உருவங்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது.
உற்சவருக்கும் பாலாலய பெருமாளுக்கும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர அரத்தி காண்பிக்கப்பட்டது. ஜீயா் சுவாமிகள் மற்றும் அதிகாாிகளுக்கு மாியாதை செய்யப்பட்டது. வருகின்ற பிப்பிரவாி 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இந் நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் கலந்துகொண்டு ஆசிகள் வழங்கினாா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயர் மடம் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.