பழைமையான கற்காம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம்
பெருஞ்சேரியில் மிகவும் பழைமையான கற்காம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது பெருஞ்சேரி கிராமம்.சிவனை எதிர்த்து தேவர்கள் யாகம் செய்த இடம். இங்கு மிக பழைமையான கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு கண்காணாதீஸ்வரர் கற்பகாம்பாள், விநாயகர், பரிகார மூர்த்திகளுக்கு இன்று மகா கும்பாபிசேகம் நடைபெற்றது இக்கும்பாபிசேகத்தை ஒட்டி, யாகசாலை அமைத்து புனித நீர் கடங்களை வைத்து சிவாச்சாரியார்கள் நான்கு கால பூஜை செய்து இன்று பூர்ணாகுதி நடைபெற்றது.
அதையொட்டி,சிவ வாத்தியம்.மேல தாளம்,வானவேடிக்கை முழங்க, சிவாச்சாரியார்கள் புனித நீர் கடங்களை சுமந்து வேத மந்திரங்கள் ஒலிக்க, கோயில கோபுரங்களை அடைந்தார்.
பின்னர் விமான கோபுரகலசத்தில், மலர் மாலைகள் சூடி, மந்திரங்கள் ஓதி, சிவாச்சாரியார்கள் கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றி மிக சிறப்பாக மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. இக் கும்பாபிசேகத்தை காண ஆயிரக்கனக்கில் பக்தர்கள் குவிந்து ஓம் நமச்சிவாய என கூறி ஈசனை வழிப்பட்டனர்.