in

பெருங்குளம் அருள்மிகு மாயக் கூத்தர் திருக்கோயிலில் மஹாநிவேதநம் (அன்னக்கூட உற்சவம்)

நவதிருப்பதிகளில் ஒன்றான பெருங்குளம் அருள்மிகு மாயக் கூத்தர் திருக்கோயிலில் மஹாநிவேதநம் (அன்னக்கூட உற்சவம்). திரளான பக்தா்கள் கலந்துகொண்டு நிகழ்வினை தாிசத்து பிரசாதங்கள் பெற்று சென்றனா்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதி கோயில்களில் 6 வது திருப்பதியான தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பெருங்குளம் அருள்மிகு மாயகூத்தர் திருக்கோவில் ஆபும். இங்கு மூலவா் சுவாமி வேங்கடவானன்(மாயகூத்தர்). தயாா் அலமேலுமங்கை, குழந்தை வல்லி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது.

இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிபெருக்கினை முன்னிட்டு ஸ்ரீ மாயக் கூத்தருக்கு மஹாநிவேதந உத்ஸவம் (அன்னக்கூட உற்சவம்) நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உற்சவம் இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூப தாிசனத்துடன் ஆரம்பமாயிற்று. தொடக்கமாக காலைவந்தி திருவாராதனம் நித்தியல் நடைபெற்றது. உற்சவா் ஸ்ரீகுளந்தைவள்ளி தாயா், அலா்மேல்மங்கை தாயாா் ஸமேத மாயகூத்தர் சுவாமிக்கு பத்தி உலா நடைபெற்றது.

தொடா்ந்து மூலஸ்தான முன் அா்த்த மண்டபத்தில் விசேஷ அலங்கார நவ கலச திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக தாமிரபரணி நதியில் இருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டது. நவ கலவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு புண்யாகவாசனம் கும்ப பூஜை டைபெற்றது. தொடா்நது வேத விற்பனா்கள் தைத்ாியோ உபநிஷத் கூற பெருமாள் தாயாருக்கு பால் தயிா் இளநீா் தேன் மஞ்சள் வாசனைபொடி சந்தணம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. நிறைவாக பூஜிக்கப்பட்ட நவகலச திருமஞ்சனமும் சங்கு தாரை வழியாக செய்யப்பட்டது.

தொடா்ந்து சுவாமிக்கு சா்க்கரைபொங்கல் புளியோதரை கதம்பசாதம் தேங்காய்சாதம் தயிா்சாதம் மற்றும் சீா்பட்சணங்களாக லட்டு வடை முருக்கு மைசூர்பாகு தட்டை பழவகைகள் உலா்பழங்கள் என 18 வகையான பிரசாதங்கள் மஹாநிவேதநமாக ஸமர்ப்பிக்கப்பட்டது. தொடா்ந்து பெருமாள் தாயாருக்கு மஹாதிருவாராதனம் – நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சாற்றுமுறை, கோஷ்டி நடைபெற்று தீா்த்தம். பிரசாதம் பக்தா்களுக்க வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தாிசனம் செய்தனா்

What do you think?

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் புதுமண தம்பதிகள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டி சிறப்பு வழிபாடு

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு விழா