in

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் மகா ருத்ர யாகம்

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் மகா ருத்ர யாகம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் மகா ருத்ர யாக வைபவம் நடைபெற்றது இக்கோவிலில் விஷ்ணு துர்க்கை அம்மன் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் சுவாமி ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள் பாலித்து வருகின்றனர் ஆண்டுதோறும் இக்கோவிலில் ஆடிப்பூரவிழா பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு இவ்விழா கடந்த 29ஆம் தேதி அன்று காப்பு கட்டத்தலுடன் துவங்கியது விழாவின் ஒரு நிகழ்வாக மகா ருத்ர யாகம் நடைபெற்றது முன்னதாக கோவில் மண்டபத்தில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களில் வைத்து யாககுண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது தொடர்ந்து யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம் கோ பூஜை அஸ்வக பூஜை வசதாரா ஹோமம் ஸ்ரீ ருத்ர ஹோமம் மற்றும் வேத பாராயணங்கள் நடைபெற்று யாக குண்டத்தில் பட்டு வஸ்திரங்கள் பூமாலைகள் சமர்ப்பித்து பூர்ணகுதி அளிக்கப்பட்டன பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து மூலவர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளுக்கு சிவாச்சாரியாரின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் ருத்ர யாகத்தில் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை வழிபாடு செய்தனர்.

What do you think?

ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவில் கும்ப படையல் இட்டு சிறப்பு பூஜை..

தீர்த்த பாலீஸ்வரர் கோயிலில் ஆடி பூர விளக்கு பூஜை விழா