சீனாவில் பட்டிய கிளப்பும் மகாராஜா
ஹீரோயிசம் காட்டாமல் கொடுத்த கேரக்டரில் கச்சிதமாக தன்னை பொருத்தி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவார் மக்கள் நாயகன் விஜய் சேதுபதி.
ஒரு பின்னணி நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கி, வழக்கத்திற்கு மாறாக கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து, இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்கும் நட்சத்திரமாக மாறினார்.
இவரது ஐம்பதாவது படமான மகாராஜா 100 கோடி வசூல் செய்து வெற்றி பெற்ற நிலையில், இந்த படம் சில தினங்களுக்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்டது.
அலிபாபா நிறுவனம் இந்த படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிட்டது. வித்தியாசமான கதை கலத்துடன் அப்பா மகள் பாச போராட்டத்தை பின்னணியாக வைத்த எடுக்க பட்ட மகாராஜா சீன மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இந்த வாரம் இறுதியில் மட்டும் 25 கோடி வசூல் செய்து சீனாவிலும் விஜய் சேதுபதி மகாராஜா …வாக விற்றிருகிறார்.