மயிலம் பங்குனி உத்திர பெருவிழா தங்கமயில் வாகன உற்சவம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு இன்று தங்கமயில் வாகன உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திண்டிவனம் அடுத்த திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்ரமணி சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு ஆலய யாகசாலை மூலிகைப் பொருட்கள், திரவியங்கள் வாசனை பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் நவதானிய பொருட்கள் தேன், பன்னீர், பால், பழங்கள் உள்ளிட்டு வை வைத்து செலுத்தப்பட்டது. தொடர்ந்து பூர்ணாஹூதி செலுத்தி யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமிற்கு மகாதிபாரதனை நட்சத்திர தீபாரதனை பஞ்சமுக தீபாரதனை சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வந்து தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் தங்கமயில் வாகனத்தில் மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 23/4/2024 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.