விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு இந்திர விமானம் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு தங்கக்கவசத்தில் ரம்யமாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முருகப் பெருமான் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்றாலும், அவரை பாராட்டி, சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், முருகனின் முழுஅருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இன்று முருகக் கடவுளுக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வழிபட வேண்டும்.தொடர்ந்து மகாதீபாரதனை,சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம்,பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன.
ஐப்பசி மாதம் கார்த்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். முருகனின் அருளால் நோய்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் நீங்கும். அதுமட்டுமல்லாமல் நன்மக்கட்பேறு, செழிப்பான பொருளாதார நிலை, நீண்ட ஆயுள் ஏற்படும்.உட்பிரகாரம் வந்து இந்திர விமானத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மலை மேல் வலம் வந்து அழகன் முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் பாண்டிச்சேரி உள்துறை அமைச்சர் திரு.நமச்சிவாயம் அவரது மனைவி வசந்தி நமச்சிவாயம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.