in

மக்கர் பண்ணும் டைரக்டர் சங்கர்… இந்தியன்2 படம் ரிலீஸ்சுக்கு தடா…. கடுப்பில் நாயகன்

மக்கர் பண்ணும் டைரக்டர் சங்கர்… இந்தியன்2 படம் ரிலீஸ்சுக்கு தடா…. கடுப்பில் நாயகன்

உலகநாயகன் கமலஹாசன் படம் என்றாலே பிரம்மாண்டமாகவும் புதுமையாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது.

தற்பொழுது பிரம்மாண்ட இயக்குனர் சங்கருடன் கூட்டணி வைத்து இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து கொண்டிருப்பதால் நிச்சயமாக இந்தியன் 2 மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே எகரி கொண்டிருக்கும் நிலையில் இந்தியன் டு ரிலீஸ் ஆவதில் விடாமுயற்சி படத்தைப் போலவே இழுப்பறி நிலை நீடிக்கிறது .

1996 ஆம் ஆண்டு கமலஹாசன், மனிஷா கொய்ராலா மற்றும் சுகன்யா உடன் இணைந்து நடித்த இந்தியன் படம் மெகா வெற்றியை அடைந்தது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றது.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியன் 2 படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிய சங்கர். 325 கோடி பட்ஜெட்டு என்று Lycaa உடன் கூட்டணி அமைத்தார்.

ஆனால் தற்பொழுது 425 கோடியை தாண்டிவிட்ட நிலையில் கோபம் அடைந்த லைக்கா இதற்கு மேல் செலவு செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவிக்க கோபமான சங்கர் 450 கோடி நிச்சயம் வேண்டும் என்றாராம் கறாராக…

இவர்கள் சண்டை முத்தவே உதயநிதி தலையிட்டு சமரசம் செய்த பின்பு 425 கோடிக்கு சம்மதம் தெரிவித்த சங்கர் சமீபத்தில் ஒரு பாடலை மட்டும் 30 கோடி செலவு செய்து எடுத்தாராம்.

இதனால் கடுப்பான லைக்கா படத்தின் பட்ஜெட் 450 கோடி எகிறி விட்டது. இதற்கு மேல் எங்களால் செலவு செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். எப்பொழுதுமே பட்ஜெட்டை பற்றி கவலைப்படாத சங்கர் தான் நினைத்தபடி தான் படம் எடுப்பேன் என்று எல்லாம் ப்ரொடியூசர் தலையில் துண்டை போடுவார்.

அதே போல் தான் தற்பொழுதும் தான் புடிச்ச முயலுக்கு மூணு கால் என்று படத்தின் பட்ஜெட்டை குறைக்க மாட்டேன் என்று விரைப்பாய் இருக்கிறாம்.

கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக வேண்டிய படம் புஷ்பா 2 படத்தின் வெளியிட்டால் தள்ளி போடப்பட்டது. தற்பொழுது கோடைகால விடுமுறை முன்னிட்டு மே மாதத்திற்காவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று லைக்கா ஆர்டர் போட்டு இருக்கிறதாம். ஆனால் சங்கர் துட்ட காமிச்சாதான் அடுத்த கட்ட படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும் என்று வீம்பாக இருகிறாராம்.

What do you think?

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி

நர்சிங் மாணவி நாடகம் போலீசார் விசாரணையில் அம்பலம்