நக்கல் பண்ணிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகன்
தங்களான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகன் தற்போது கார்த்திக்குடன் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் மோகன்லாலுடன் இணைந்து இருதயபூர்வம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தின் அனுபவம் குறித்து இணையத்தில் மாளவிகா மோகன் பதிவிட்டு இருக்கிறார்.
மோகன்லால் சார் மற்றும் இயக்குனர் சத்யன் சார் ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் அவர்கள் மிகவும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துகிறார்கள் என்ற அவரின் பதிவுக்கு ரசிகர் ஒருவர் 65 வயது நடிகருடன் 30 வயது நடிகை நடிப்பதா என கேள்வி கேட்க அதற்கு மாளவிகா மோகன் அவருக்கு நான் ஜோடியாக நடிப்பதாக யார் சொன்னா எதுவும் தெரியாமல் நீங்களே ஒரு முடிவுக்கு வந்து பேசக்கூடாது என்று கோபமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.