சிறுவர் சிறுமியர்கள் நடத்திய மல்லர் கம்ப சாகச நிகழ்ச்சி
100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சிறுவர் சிறுமியர்கள் நடத்திய மல்லர் கம்ப சாகச நிகழ்ச்சி…
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், 100% கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காந்திநகர் மைதானத்தில் சிறுவர் சிறுமியர்கள் நடத்திய மல்லர் கம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், ஏன்? எதற்காக? வாக்களிக்க வேண்டும், நிச்சயம் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சியும், கயிறின் மீது ஏறி பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினர்.
முன்னதாக மாணவர்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக மல்லர் கம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் காத்திருந்து பார்த்தனர்.
சிறுவர் சிறுமியர்கள் செய்த மல்லர் கம்பம் நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.