மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வாழ்வாதார பிரச்சனை தேசிய மனித உரிமை ஆணையம் நேரில் விசாரணை
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வாழ்வாதார பிரச்சனை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரில் விசாரணை மூன்றாவது நாளாக இன்று பி பி டி சி நிறுவன சேர்ந்த ஆறு பேர் விசாரணை முன்பு ஆஜர்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் தேயிலைத் தோட்ட உள்ளது.
இந்த தேயிலை தோட்டத்தை 99 ஆண்டுகளுக்கு பிபிடிசி நிறுவனம் குத்தகை எடுத்து நடத்தி வந்தது.
வருகின்ற 2028 ஆம் ஆண்டு இந்த குத்தகை முடிவடைய உள்ளது இந்நிலையில் மாஞ்சோலை, நாலு மூக்கு, ஊத்து மற்றும் காக்காச்சி ஆகிய பகுதிகளில் 539 தொழிலாளர்கள் தற்போது அங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.
இதில் பெரும்பாலான தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் கட்டாய விருப்ப ஓய்வை BPTC நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் பல தொழிலாளர்கள் கட்டாய விருப்ப உறவை வழங்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் இந்த பகுதியில் தேயிலை பறிக்கும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 539 தேயிலைத் தோட்ட தோட்ட தொழிலாளர்களும் ஏற்கனவே ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உட்பட 700 பேர் அங்கு வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் வசித்து வரும் வீடுகளுக்கு மின்சாரத்தை தடை செய்வதும் சரியான முறையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாமலும் அடிக்கடி அரசு பேருந்து சேவையை நிறுத்துவதும் குடிநீர் வினியோகம் நிறுத்துவதும் என அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை தமிழக அரசு கொடுத்து வருவதாக தேயிலைத் தோட்டத்துள்ளார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நான்கு மாதங்களாக வாழ்வாதாரம் இல்லாமல் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய மனித உரிமை ஆணைய குழுவில் டிஎஸ்பி ரவி சிங் தலைமையில் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் ஆய்வாளர் யோகேந்திர குமார் திரு பாதியும் உடன் வந்துள்ளார்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் மாஞ்சோலை நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
இன்று மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த விசாரணை மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் விசாரணை காலை 11.30 மணிக்கு துவங்கியது.
இந்த விசாரணையின் போது பி பி டி சி நிறுவனத்தின் அதிகாரிகள் 6 பேர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இதில் குழு மேலாளர் திம்மையா, துணைக் குழு மேலாளர் பட்டாச்சியா, கள நிர்வாக மேலாளர் (சட்டம்) சௌமியா வெங்கடாசலம், அலுவலக நிர்வாகம் (கணக்கு) ஜான் செல்வராஜ், பிரிவு அலுவலர் வில்சன் கிருபாத்துரை மற்றும் கள கண்காணிப்பாளர் எபநேசன் பாபு ஆகிய 6 பேர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளித்து வருகிறார்கள்.
இதே போல் சமூக ஆர்வலர் முத்துராமன் உள்ளிட்ட பலரும் நேரடியாக வந்து தேசிய மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக தங்களது விளக்கத்தை அளிக்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் பொதுமக்கள் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ஏதேனும் மனு கொடுக்கலாம் அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.