மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒடுக்கு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா 10-வது நாளான நேற்று நள்ளிரவு அம்மனுக்கு 11-வகை உணவு பதார்தங்கள் மண் பானைகளில் துணிகளால் மறைத்து எடுத்து வரப்பட்டு படையலிடும் ஒடுக்கு பூஜை சிகர நிகழ்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு அதிகாலை வரை நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கழிந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
தொடர்ந்து 10-நாட்கள் நடைபெறும் மாசிக்கொடை விழாவில் தினமும் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை அம்மன் தங்க தேர் உலா வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்தது
9-வது நாளான திங்கள் அன்று நள்ளிரவு வெள்ளி பல்லக்கில் அம்மன் வீதி உலா மற்றும் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலமும் நடைபெற்றது
நேற்று செவ்வாய் கிழமை மாசிக்கொடை விழா இறுதி நாளான 10-வது நாள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் வழங்கப்பட்டது
இதனையடுத்து அதிகாலை முதலே மண்டைக்காட்டில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வந்தனர்.
நள்ளிரவு மறைவான இடத்தில் தயாரிக்கப்பட்ட பதினொன்று வகையான உணவு பதார்த்தங்கள் மண் பானையில் துணிகளால் மறைத்து கோயில் அர்ச்சகர்களால் பவனியாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு படையலிட்டு தீபாராதனையுடன் ஒடுக்கு பூஜை சிகர நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒடுக்கு பூஜை சிகர நிகழ்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் விடிய விடிய நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
முக்கிய நிகழ்வான ஒடுக்கு பூஜையின் போது பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.