சிவகங்கை அருள்மிகு ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழா
சிவகங்கை அருள்மிகு ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழா முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் குண்டு ஊரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு இவ்விழா கடந்த 18ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒரு நிகழ்வாக பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமியை வழிபட்டனர் முன்னதாக ஶ்ரீ சங்கடி வீரனார் கோவிலில் அருள் பாலிக்கும் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் பால்குடங்களை எடுத்து ஜெண்டை மேல வாத்தியங்களுடன் நகரின் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து ஐயப்பன் கோவிலில் அடைந்தனர். பின்னர் மூலவர் ஐயப்ப சுவாமிக்கு உற்சவர் சுவாமிக்கும் பக்தர்கள் சமர்ப்பித்த பால் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சந்தன காப்பு சாற்றி சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.