in ,

இந்தியா வேலைவாய்ப்பு இல்லாத நாடாக உருவாகி விட்டதாக மாணிக்கம் தாகூர் பேச்சு


Watch – YouTube Click

இந்தியா வேலைவாய்ப்பு இல்லாத நாடாக உருவாகி விட்டதாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேச்சு.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் தேவர் சிலை முன்பு மற்றும் காந்திநகர் முக்கு போன்ற பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பரப்புரை மேற்கொண்டார்.

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் மற்றும் விருதுநகர் மாவட்ட கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஏராளமான பொதுமக்கள் மாணிக்கம் தாகூர் அவர்களை உற்சாகமாக வரவேற்று அவருடைய பேச்சை ஆர்வமாக கேட்டு அவருடைய கேள்விக்கு பதில் அளித்தனர் .

தேர்தல் பரப்புரையில் பேசிய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில்

வரும் நாடாளுமன்றத் தேர்தல் விலைவாசி சம்பந்தப்பட்ட தேர்தல் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள இந்தியா பற்றிய தேர்தல் எனவும்

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசால் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்திருப்பதாகவும், மோடி ஆட்சியில் உள்ளவரை விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.

டீசல் விலையை குறைக்காமல் எந்த பொருளின் விலையையும் குறைக்க முடியாது

மத்தியில் இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் டீசல் விலை 75 ரூபாயாக குறைக்கப்படும் இதன் காரணத்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறையும்

காங்கிரஸ் ஆட்சியில் 450 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை மோடி ஆட்சியில் ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும், மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் சிலிண்டரின் விலை 2000 ஆக உயரும் என கூறிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் யாருக்கெல்லாம் 2000 ரூபாய்க்கு சிலிண்டர் வேண்டும் என கேட்டு கையை உயர்த்தக் கூறினார் நகைச்சுவை ஏற்படுத்தினார் இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை எனவும் வேலை வாய்ப்பு இல்லாத நாடு இந்தியா என மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார் 30 லட்சம் மத்திய அரசின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பின்பு ஒரு வருடத்திற்குள் உரிய தேர்வு நடத்தி 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பு

இஸ்ரேல் ஈரான் போர் மூளும் அபாயம் அமெரிக்கா எச்சரிக்கை