TVK கட்சியின் மீது பரபரப்பு புகார் கொடுத்த டிரைவர் மணிகண்டன்
தமிழக வெற்றி கழகதின் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது எந்த பெரிய கட்சிகளின் ஆதாரவும் பெரிதாக இல்லை என்றாலும் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தினர் விஜய்.
தன் ரசிகர்கள் மற்றும் மக்களை நம்பி மட்டுமே அரசியலில் இறங்கி இருப்பதாக கூறினார் .மேலும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பத்து லட்சத்திற்கு மேல் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
விஜய் மாநாட்டில் தன் கொள்கைகளை பற்றி மட்டுமே கூறியிருந்தார் . ஆனால் மற்ற கட்சிகள் அவரின் மாநாடு பற்றி எந்த விமர்சனமும் செய்யாத நிலையில் சீமான் மட்டும் வழக்கம் போல மைக்கை கொடுத்துட்டீங்களா பேசிக்கொண்டே இருக்கிறேன் என்று விஜய்யை வாய் ஓயாமல் தாறுமாறாக பேசி வருகிறார்.
அவரது கட்சி தொண்டர்களும் அவரை ரோல் செய்து வம்பு இழுக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்ற ஓட்டுநர் ஒருவர் விஜய் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார் .. தமிழக வெற்றி கழக மாநாட்டுக்கு டிரைவர் வேண்டுமென்று மயிலாப்பூர் மோகன் டிராவல்ஸ் எனக்கு கால் பண்ணாங்க சம்பளம் எல்லாம் கூறியதால் அடுத்த நாள் காலை 10 மணிக்கு வண்டியை எடுத்துக்கிட்டு அங்கிருக்கும் தொண்டர்களை அழைத்து வர சொன்னாங்க நானும் அவர்களை அழைத்துக் கொண்டு மாட்டிற்கு சென்றேன் அங்கு காலை மதியம் சாப்பாடு மட்டும்தான் கொடுத்தாங்க அதன் பிறகு எனக்கு ஒரு சொட்டு தண்ணி கூட கொடுக்கல, பார்கிங் வசதியும் இல்ல அங்கிருந்த வயலில் தான் வண்டியை நிறுத்தினேன்.
தொண்டர்களை இறக்கி விட்ட பிறகு என் சம்பளத்தை போடுங்கள் என்று கூறினேன் காலையில் அக்கவுண்டில் போடுவதாக சொன்னார்கள் அதனால் அங்கேயே தூங்கி விட்டேன் ஆனால் அதுக்கு அடுத்த நாளும் தரவில்லை விஜய்யின் அலுவலகம் சென்றபோது அவர்கள் என்னை மோசமாக பேசி அவமானப்பட்டு துரத்தி விட்டனர்.
நான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். மீண்டும் விஜயின் அலுவலகத்திற்கு சென்றேன் என்னை அங்கு இருக்கம் அலுவலர்கள் அடிக்க வந்தனர் .போலீசார் சமரசம் பேசுவதாக கூறினர் இன்றுவரை நான் வேலைக்கு போகவில்லை சம்பளத்திற்காக பிச்சைக்காரன் கணக்கா அலைஞ்சிடிருக்கேன் என்று கூறினார்.
எத்தனையோ ஏழை மக்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் உதவி செய்யும் விஜய் ஒரு ஏழையின் வயிற்றில் அடிப்பாரா? இவருக்கான சம்பளத்தை கொடுப்பாரா? அல்லது வேறு ஏதேனும் வேலை ஏற்பாடு செய்து கொடுப்பாரா? தொண்டர்களின் அராஜக வேலைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? மாநாட்டில் சொன்ன மாதிரி காட்சியின் கொள்கையை கடைபிடிப்பாரா பார்போம்.