இயக்குனர் மீது மஞ்சு வாரியர் போலீசில் புகார்
மலையாள திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த மஞ்சு வாரியார் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விட்டார் . மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்தவர் 2015 ..இல் விவாகரத்து பெற்றார் . திலீப் மஞ்சு வாரியாரை திருமணம் செய்வதற்கு முன்பே உறவுகார பெண் ஒருவரை திருமணம் செய்தார் என்ற அதிர்ச்சி தகவலும் உண்டு மேலும் நடிகை..கடத்தல்.. இப்படி பல பிரச்சனைகளால் திலீப்பை பிரிந்தார்.இவருக்கு ஒரு மகள் உண்டு. மஞ்சு வாரியார் 2014ம் ஆண்டு “ஹொவ் ஓல்ட் ஆர் யூ” திரைப்படத்தில் மீண்டும் மலையாள திரையுலகில் நுழைந்தார்.
இப்படத்திற்கு பிறகு நாயகிகளுக்கான முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தவர், ” மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டதை பெற்றார். தமிழில் தனுஷ் உடன் அசுரன் படத்தில் நடித்தவர் அதன்பிறகு துணிவு, வேட்டையன் ஆகிய படங்களில் நடித்தார். இவர் மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மீது புகார் ஒன்று அளித்துள்ளார். இவர் இயக்கிய ஓடியன் என்ற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சுவார் நடித்திருந்தார். ஸ்ரீகுமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதாகவும், தன்னை கடுமையாக திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் இயக்குனரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமினில் வெளியே விட்டனர். கேரளா கோர்ட்டில் இந்த கேஸ் விசாரணைக்கு வந்த போது மஞ்சு வாரியார் ஆஜராகவில்லை இதனால் ஸ்ரீகுமார் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார் .