மண்ணாடிபட்டு தொகுதி பாஜக பிரமுகர் சீனுவாச மூர்த்தி தலைமையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதி பாஜக பிரமுகர் சீனுவாச மூர்த்தி ஏற்பாட்டில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார் அவருக்கு 500 கிலோ சாமந்திப்பூக்கள் அவர் மீது தூவி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து திருமண நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 50 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்