கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களின் கருத்துகளை பலரும் கேட்கவில்லை.
இந்த நிலை நீடித்தால் 2026 சட்ட மன்ற தேர்தலிலும் நாம் எதிர்க்கட்சியாகவே இருக்க நேரிடும் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி திருச்சி கள ஆய்வு பணிக் குழு கூட்டத்தில் காட்டம்
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி பதவி தரப் போகிறோம் . கண்டிப்பாக நாம் (அதிமுக) வெற்றி பெறுவோம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
முதல்வரை, இபிஎஸ் விவாதத்திற்கு அழைத்தால் துணை முதல்வர் வருவதாக தெரிவிக்கிறார். சிங்கத்துடன் சிங்கம் தான் விவாதம் செய்ய வேண்டும். மாறாக, எலிக்குட்டியுடன் செய்ய முடியாது – திருச்சியில், திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் (சினிவாசா) திருமண மண்டபத்தில், திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக கள ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான P.தங்கமணி,முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரெத்தினவேல் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
முன்னாள் எம்பி ரெத்தின வேல் பேசுகையில் …
அம்மா (ஜெயலலிதா) மறைவிற்கு பிறகு அதிமுக வை கட்டிக்காத்த பெறுமை எடப்பாடியாருக்கு (பழனிசாமி) உண்டு.
எடப்பாடியார் ஆட்சியில் மின் மிகை மாநலமாக தமிழகம் திகழ்ந்தது. அன்று விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருந்தது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததால் பாராட்டு பெற்ற மாநிலமாக திகழ்ந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தார்.
சிறப்பான ஆட்சியை தந்த அம்மாவின் மாணவரான எடப்பாடியார் கரங்களை வழுப்படுத்தி வரும் 2026 தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் ஒற்றுமையாக இணைந்து வெற்றியை தேடித்தருவோம் என்றார்.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசுகையில் …
புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆணைக்கு இணங்க, கழகத்திற்கான உறுப்பினர் சேர்ப்பு பணி என்பது, ஒரு திண்ணை பிரச்சாரமாக நடத்தப்பட்டது.
வசதி படைத்த ஒரு அமைச்சர் திருச்சியில் இருந்துவருகிறார். அவரை தேர்தலில் வீழ்த்துவதற்கு பூத் வாரியாக பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி கூட்டம் என்றால் ஒவ்வொரு பூத் யில் இருந்தும் குறைந்தபட்சம் 10நபர்களை அழைத்துவந்து பங்கேற்கச் செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் கருத்துவேறுபாடு இல்லாமல் பெண்களை பங்கெடுக்கச்செய்ய வேண்டும்.
வெற்றி பாதையில் கடினமாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில் …
அடிமட்ட உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய எடப்பாடியார், தனது உழைப்பாலும், விசுவாசத்தாலும் இன்று கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இவர் தமிழகத்தில் 4ஆண்டுகாலம் முதல்வராக சிறப்பான ஆட்சியை தந்தார்.
2தொகுதிகளை கொண்டது திருச்சி மாநகர மாவட்டம். அம்மாவை வெற்றிபெறச்செய்து, அம்மாவின் கோட்டையாக இருந்தது திருச்சி. இதனை மீண்டும் அதிமுக வின் கோட்டையாக மாற்ற கருத்துவேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த புரட்சி தலைவருக்கும், புரட்சி தலைவிக்கும் நன்றிக்கடனாக, வரும் 2026 தேர்தலில் அதிமுக வை வெற்றிபெறச்செய்யுங்கள்.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி எதிரணியினர் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை, சிவகாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்த நிலையில் புரட்சி தலைவர் தனது கடின உழைப்பால் அதிமுக வை ஆட்சிகட்டிலுக்கு கொண்டுவந்தார். சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்கு விகிதம் உயர்ந்துள்ளது. அதே தேர்தலில் திமுக வின் வாக்கு விகிதம் குறைந்து விட்டது. இதனை மனதில் கொண்டு சட்டமன்ற தேர்தலில் உழைத்து அதிமுக வை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்றார்.
நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கட்சி என வந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
நமக்குள் ஒற்றுமை இல்லை. இனி ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் யாரை நிறுத்தினாலும் எதிர்ப்பு காட்டுகிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் . அதன் அடிப்படையில் இந்த கள ஆய்வு கூட்டம்
நடத்தப்படுகிறது.
கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களின் கருத்துகளை பலரும் கேட்கவில்லை.
இந்த நிலை நீடித்தால் 2026 சட்ட மன்ற தேர்தலிலும் நாம் எதிர்க்கட்சியாகவே இருக்க நேரிடும் காட்டமாக பேசினார்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்….
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். ஊடகங்களை திமுக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அதிமுக செய்திகளை வெளிவராமல் தடுத்துவருகிறது.
அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர். அடித்து நொறுக்கி பணத்தை அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்கள் நடத்துவதை காணமுடிவதில்லை.
ஒரு முதல்வர் பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவருகிறார். அரசியல் ஆண்மை இருந்தா திமுக அரசின் சாதனைகளை பட்டியலிடட்டும் என்னுடன் விவாதிக்க தயாறா? என எடப்பாடியார் கேட்டதற்கு இதுவரை ஸ்டாலின் பதில் சொல்ல வில்லை.
உதயநிதி ஸ்டாலின் நான் விவாதிக்க வருகிறேன் என்கிறார் சிங்கமும் எலிக்குட்டியும் ஒன்றா?
திமுக வை அப்பாவும் மகனும் கண்டு பிடிச்ச மாதிரி நடந்துக்கொள்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டுவந்தவர் அறிஞர் அண்ணா. கட்சிக்கு இடையில் வந்தவர் கலைஞர்.
எடப்பாடியாருக்கு தெய்வத்தின் அருள் இருக்கிறது. 2நாளில் சசிக்கலா முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் நடந்த வேலையில், நீதிமன்ற தீர்பால் அவர் 4 ஆண்டு சிறைக்கு சென்றுவிட்டார். அவரை முதல்வராகவிடாமல் இறைவன் தடுத்துவிட்டார். இறைவன் வாய்ப்புக்கொடுத்த எடப்பாடியாரை நாங்கள் ஆதரித்துவருகிறோம்.
முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்-க்கு துரோகம் செய்தது சசிகலாவும் டிடிவி தினகரன் தான்.
பின் சசிகலா முதல்வராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர் ஆனால் கடவுள் அருளால் இபிஎஸ் முதல்வரானார்.
அம்மாவின் உதவியாளராக வந்த சசிகலா பல மாவட்டங்களில் கோடீஸ்வரர்களை உருவாக்கிய சசிகலா தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்பட்டார் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆசைப்பட்டார் இப்போது இருவருமே செல்லாக்காசு தான்
தேனியில் தோல்வியுற்றவர் டி.டி.வி. இவரிடம் மைக்கை நீட்டினால் 2026 எடப்பாடியார் கட்சியை ஒழித்துவிடுவார் என்கிறார். டி.டி.வி என்ன ஜோதிடரா?
நிறைய கொள்ளையடித்து அறக்கட்டளை பேரில் பணம் வைத்திருக்கிறார்கள். அந்த பணத்தில் எழுதாத பேனாவை வைத்துக்கொள்ளட்டும். அரசு பணத்தில் எழுதாத பேனா எதற்கு?
கஞ்சா விற்பது திமுக காரர்கள்.
லஞ்சம் வாங்கி சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு வெட்கம் இல்லாமல் முதல்வர் வரவேற்பு கொடுக்கிறார்.
அவருக்கு மீண்டும் மந்திரி பதவி. இதை கேட்க நாதி இல்லாமல் போனது. அட்சியில் இருப்பதால் சர்வாதிகாரி போல நடந்துக்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்பிள்ளைகளை நம்பி எங்கும் அனுப்பமுடியவில்லை. பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
திருச்சியில் டிடிவி சற்று குழைத்து வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். அதையெல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி பதவி தரப் போகிறோம் கண்டிப்பாக நாம் (அதிமுக) வெற்றி பெறுவோம்.
2026 இல் அதிமுக ஆட்சி அமையப்போவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது..
திருச்சியில் அதிமுகவினர் சோம்பலாக, சோர்வாக இருப்பதாக கேள்விப்படுகிறோம். இதற்கு, ஓபிஎஸ், டிடிவி தினகரன் தான் காரணம். அவர்கள் தொடர்ந்து அதிமுகவினர் குழப்பி வருகின்றனர். ஆனால் தொண்டர்கள் எவ்வித குழப்பத்திற்கும் ஆளாக வேண்டாம். ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் என்பது உறுதியானது. எனவே வரும், 2026ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வைத்து முதல்வர் ஆக்குவோம்