சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத சிறப்பு அபிஷேக ஆராதனை
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவிலில் மார்கழி மாத முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
முன்னதாக மூலவர் ரகுமாயி பாண்டுரங்கன் சுவாமிக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து புதுப்பட்டு வஸ்திரம் அணிவித்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.
பின்னர் துளசிக் கொண்டு அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பாண்டுரங்கங்கன் ரகுமாயி தாயாரை வழிபட்டனர்.