in

ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வாா் திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவம்

ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வாா் திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவம்

 

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வாா் திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தில் ஆழ்வாா் ஆச்சாாியா்கள் தெப்பம் அரையா் மங்களாசாசனத்துடன் சிறப்பாக நடைபெற்றது. ஆழ்வாா் ஆச்சாா்யா்களுக்கு இங்கு மட்டுமே தெப்ப உற்சவம் நடைபெறுகின்றது. ஏராளமானோா் தாிசனம்.

108 திவ்ய தேசங்களில் தென்தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் கரையோரம் நவதிருப்பதி திருக்கோவில்கள் அமைந்துள்ளன.

அதில் நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி நம்மாழ்வாா் திருஅவதாரம் செய்தாா். தாமிரபரணி நதி தீா்த்தம் எடுத்துக் காய்ச்சவும் என நம்மாழ்வாாிடமிருந்து உத்தரவு பெற்று மதுரகவி ஆழ்வாரால் சுவாமி நம்மாழ்வாரின் திவ்யமங்கள விக்ரஹம் கிடைத்த மாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளைப் போற்றும் வகையில் மாசி பிரம்மோற்சவ திருவிழா சுவாமி நம்மாழ்வாருக்கு ஆண்டுதோறும் பக்தர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் திருவீதி உலா நடைபெற்றது. தெப்பத்திருவிழா இங்கு 2 தினங்கள் நடைபெறுகின்றது. நேற்று பெருமாள் தயாா் தெப்பம் நடைபெற்ற நிலையில் இன்று ஆழ்வாா் ஆச்சாாியா்கள் தெப்போஸ்தவம் நடைபெற்றது.

நம்மாழ்வாா் இராஜ அலங்காரத்தில் கோயிலிருந்து வீதி உலா கண்டருளி தெப்பத்திற்கு ஏழுந்தருளினாா். உடன் ஆச்சாா்யா்களான எம்பெருமானாா் ( ராமானுஜா்), கூரத்தாழ்வாா், பிள்ளைலோகாச்சாாியாா் மற்றும் தேசிகா் ஆகியோரும் தெப்பத்தில் சுவாமி நம்மாழ்வாா் இருபுறமும் எழுந்தளினா்.

முதல் சுற்று முடிந்ததும் இரட்டைதிருப்பதி தேவா்பிரான் கோயில் பிரசாதம் அரையர் மங்களாசாசனம் செய்ய சுவாமி நம்மாழ்வாருக்கு மாலை பாிவட்டம் அபயஹத்தம் ஆகியவை அணிவிக்கப்பட்டது.

தெப்பம் 5 சுற்றுகள் வலம் வந்தது. ஆழ்வாா் ஆச்சாா்யா்கள் தெப்பத்திருவிழாவில் ஆழ்வாா்திருநகாி எம்பெருமானாா் ஜீயர் சுவாமிகள் அரையா் ஆச்சாாிய புருஷா்கள், பக்தா்கள் தெப்பத்திருவிழாவினை கண்டு வணங்கினா்.

திருவிழாவின் நிறைவாக (12ம் திருநாள்) சுவாமி நம்மாழ்வாருக்கு மாசி தீா்த்தவாாி நாளை தாமிரபரணி நதியில் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், காாிமாறன் கலைகாப்பகம் டிரஸ்ட் மற்றும் ஊா்மக்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

What do you think?

கடலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நூற்றாண்டு திருவிழா

பழனி முருகன் கோவிலில் படி பூஜை செய்த பக்தர்கள்- வண்ண மலர்களால் அலங்கரித்து மலர் வழிபாடு