in

திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை சாட்சிநாதசுவாமி திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பிரமோற்சவம்

திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை சாட்சிநாதசுவாமி திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பிரமோற்சவம்

 

கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதசுவாமி திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றிய போது எதிர்பாராவிதமாக, கொடி கயிறு அறுந்து விழுந்ததால் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் அமைந்துள்ள கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதசுவாமி திருக்கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இது ஈசனின் 64வது திருவிளையாடல் சாட்சிநாத படலம் அரங்கேறிய தலமாக போற்றப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இக்கொடியேற்ற நிகழ்வின் போது, பூஜைகள் செய்து கொடி ஏற்றும் போது கொடி பாதி தூரம் வரை கூட ஏறாத நிலையில் திடீரென கயிறு அறுந்து விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

 

பிறகு பெரிய ஏணியுடன் வலுவான மாற்று கயிறும் கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் புதிய கயிறை கட்டி பிறகு மீண்டும் கொடி ஏற்றி வைக்கப்பட்டது இதனால் கொடியேற்ற நிகழ்வு சுமார் 20 நிமிடங்கள் தாமதமானது.

What do you think?

வரலாற்று சிறப்புமிக்க நாகை துறைமுகத்தை பசுமை துறைமுகமாக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்ரபாணிசுவாமி திருக்கோயில் கொடியேற்றம்