கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் மாசி மாத பொங்கல் திருவிழா
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவிலான, ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழா உலகப் பிரசித்தி ஒன்றாகும்.
குறிப்பாக, மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் இந்த பொங்கல் திருவிழா நடைபெறும். சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியை, ஆற்றுக்கால் பகவதி அம்மனாகக் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த வருடத்திற்கான பொங்கல் திருவிழா கடந்த 17ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன
பிப்ரவரி 25-ம் தேதியான இன்று காலை கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டு, இலட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்கினர்.
26-ம் தேதியான நாளை மறுநாள் காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டுத் திருவிழா நிறைவு பெறுகிறது.
கேரள மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் ஏழை, பணக்காரர்கள் என வேறுபாடு இல்லாமல் திறந்தவெளியில் பொங்கல் வைத்து ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு படைத்துவிட்டு பெண்கள் தோளின் மீது கொண்டு செல்லும் அரிய நிகழ்வும் நடைபெறும், மதுரையை எரித்த கண்ணகி தேவியின் கோபத்தை சாந்தப்படுத்துவதற்காக பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவதாக புராண கதைகளும் உண்டு, அதேபோல மகிஷா சூரனை வதம் செய்த பிறகு பக்தர்களுக்கு முன் காட்சியளித்த தேவிக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவதாகவும் மற்றொரு புராண கதைகள் கூறப்படுகிறது.
இந்த பொங்கல் நிகழ்ச்சியில் கேரள மாநில மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வழிபடுவதற்காக ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வருகை புரிந்துள்ளனர், அதேபோல கேரள அமைச்சர்களும் கேரள நடிகைகளும் பொங்கல் லிட்டு வருகின்றனர் தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருவனந்தபுரம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.