சிவகங்கை ஶ்ரீதிரௌபதி அம்மன் திருக்கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா
சிவகங்கை ஶ்ரீதிரௌபதி அம்மன் திருக்கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக மூலவர் அம்மனுக்கு பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு புதுப்பட்டு வஸ்திர சாற்றி வண்ண மலர்மாலைகள் வெட்டிவேர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.
தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏழு முக தீப ஆராதனை காண்பிக்கப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ திரௌபதி அம்மனை வழிபட்டனர்.