in

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம்


Watch – YouTube Click

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம் -பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூசை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திருகதவு திறந்ததாக வரலாற்று சிறப்புடைய கோயில் .
இந்த கோவிலின் மாசிமகத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாசி மக முக்கிய திருவிழாவின் ஒன்றான தேர்த்திருவிழா இன்று காலை 9 மணிக்கு தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேரில் எழுந்தருளி தேரோட்டமானது நடைபெற்றது.

தேரோட்டத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

மங்கள வாத்தியங்கள் முழங்க அதிர் வேட்டுகள் வெடிக்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து தியாகேசா மறைக்காடார் என பக்தி பரவசத்துடன் தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தேரோட்டத்தின் பாதுகாப்பு பணியில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேரோடும் வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு வேதாரண்யம் தாலுக்கா பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் சப்பர திருவிழா

மாவட்ட ஆட்சியரின் சக்திக்கும் பலத்திற்கும் காரணம் ஆவின் பால் தான்