கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து
கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து. ரூபாய் 8 கோடி அளவிலான கார்கள் பொருட்கள் எரிந்து நாசம்.
ஹைதராபாத் கொண்டபூரில் உள்ள மகேந்திரா ஷோரூமில் நேற்று இரவு மணி அளவில் திடீரென்று பயங்கரத்து விபத்து ஏற்பட்டது.
வியாபாரம் முடிந்து நேற்று இரவு பத்து மணி அளவில் ஷோரூம் பூட்டப்பட்ட நிலையில் நள்ளிரவு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஷோரூம்
முழுவதுமாக பற்றி எரிந்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 கார்களும் தீயில் கருகி விட்டன.
தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக ரூ 8 கோடி மதிப்புள்ள கார்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கருதப்படும் நிலையில் இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.