மாபெரும் இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் வழங்கும் முகாம்
மன்னார்குடியில் பி.எப். பிரதாப் சந்த் லுங்கட் அவர்களின் நினைவாக ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான மாபெரும் இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் வழங்கும் முகாம் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பி.எப். பிரதாப் சந்த் லுங்கட் அவர்களின் நினைவாக பிரதாப் சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன் இணைந்து நடத்தும், ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான மாபெரும் இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் வழங்கும் முகாம் 4 நாட்கள் நடைபெறுகிறது.
இம்முகாமை தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் தலைமை வகித்தார் .
இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து கைகளை இழந்தவர்கள் பங்கேற்று இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தி அதன் பயன்பாடுகளை பெற்று சென்றனர் . ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள இந்த செயற்கை கைகள் நாள் ஒன்றுக்கு 150 பயனாளிகளுக்கு கைகள் பொருத்தப்படுகிறது.
4 நாட்கள் நடைபெறும் முகாமில் 600 பேர் பயனடைவார்கள். இம் முகாமிற்கான ஏற்பாடுகளை பி.எப். பிரதாப் சந்த் லுங்கட் அவர்களின் நினைவாக பிரதாப் சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன் சுமதி பாய், சுனில்குமார் லுங்கட், பிரதிக் லுங்கட் ஆகியோர் செய்திருந்தனர்.