நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கன்வெர்ஜென்ஸ் குழுவுடன் இணைந்து மாபெரும் பயிற்சி முகாம்
தமிழ் நாட்டிலேயே முதல் முதலாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நாகை மாவட்ட நிர்வாகம், கன்வெர்ஜென்ஸ் குழுவுடன் இணைந்து மாபெரும் பயிற்சி முகாமை நடைபெற்றது.
மாவட்டம் ஈசனூர் ஆரிஃபா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் மாவட்டத்தில் உள்ள 7 பொறியியல் கல்லூரிகள், 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 6 பல்தொழில்நுட்ப கல்லூரிகள், மற்றும் 7 தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு (Internship Mela) என்ற உள்ளிடை பயிற்சி நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் செந்தில்குமாரி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதில் அரசு துறை நிறுவனங்கள், 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் வாயிலாக தொழில் நிறுவனங்கள் மாணவிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சி வழங்குகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உள்ளிடை பயிற்சி முகாம் (Internship Mela) மிகவும் எளிதாக ஆரம்ப நிலை (START UP) நிறுவனங்களில் மதிப்பு மிக்க பணி அனுபவம் மற்றும் ஆரம்ப நிலையில் சிறந்த வேலைவாய்ப்பு பெறுவதற்கான நுழைவுவாயிலாக செயல்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தெரிவித்தார்.