தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு மற்றும் முற்றுகைப் போராட்டம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வருவாய் வட்டாட்சியர் ரமேஷ்-யின் ஊழியர் விரோதப் போக்கு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் நிர்வாகத்தை கண்டித்து இன்று நாகை மற்றும் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் கிராம நிர்வாக அலுவலர்களின் பணப்பலன்கள் தொடர்பாக கோப்புகளை திட்டமிட்டு தாமதித்தல், கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்பான அலுவலக கோப்புகளை வெளிநபர்களுக்கு வழங்குதல், உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
எனவே உடனே வட்டாட்சியர் ரமேஷ்யை மாற்ற வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட 4 தாலுக்காவை சேர்ந்த 210 கிராம நிர்வாக அலுவலர்கள் இரு இடங்களில் காத்திருப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுப்பட போவதில்லை எனவும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.