கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் மாயாநதி ஹீரோ
மூன்று வருடங்களாக சன் டிவி..யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் பல போராட்டங்களுக்கு மத்தியில் கயலின் திருமணம் முடிஞ்சிருக்கு. கயல் சீரியல் தற்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை எதிர்நோக்கி போய் கொண்டிருக்கிறது.
கயலுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக இத்தனை வருடம் காத்திருந்த நிலையில் ஒரு வழியாக திருமணமும் முடிந்தது திருமணம் முடிந்தபிறகு சீரியலை முடித்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த ரஸிகர்களுக்கு செம்ம ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர்.
திருமணம் முடிந்த பிறகு தன் தந்தை பெயரில் இருக்கும் கலங்கத்தை போக்க சொந்த கிராமத்திற்கு செல்கிறார் கயல். அங்கோ கயலின் தந்தை சிறுவயதில் வாக்கு கொடுத்ததை நம்பி கயலையே நினைத்துக் கொண்டு வாழுகிறார் ஒருவர்.
யாரும் எதிர்பாராத ஒரு நபர் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் வேறு யாருமில்லை தமிழில் மாயநதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் விஸ்வா திரைப்படங்களில் பிஸி..யாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.
கயிலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கயலுக்காக சிறு வயதில் இருந்து கிராமத்தில் காத்திருக்கும் இவருக்கு கயல் என்ன பதில் சொல்ல போகிறார் இனி வரும் பிரச்சினையை கயல் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை விறுவிறுப்பான கதைகளைத்துடன் இனி பார்க்கலாம்.