in

மயிலாடுதுறையில் வன்னியர் சங்கம் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

த.வெ.கவுடன் கூட்டணி சேருவதை எல்லாம் நாங்கள் விரும்பவில்லை எங்கள் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கின்ற உணர்விலே ஒருங்கிணைக்கும் சக்தியாக நாங்கள் இப்பொழுது இருக்கின்றோம் மயிலாடுதுறையில் நடைபெற்ற வன்னியர் சங்க செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி விளக்கம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வன்னியர் சங்கம் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் வன்னியர்களின் பிரச்சனை குறித்து பகுதி வாரியாக பொது கூட்டங்கள் நடத்துவது குறித்தும், வன்னியர்களுக்குரிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தீவிரமான போராட்டங்கள் நடத்துவது குறித்தும், திருவண்ணாமலையில் நடைபெற உள்ள உழவர் பேரியக்க மாநாட்டிற்கு விவசாயிகளையும் வன்னிய மக்களையும் திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது…

இதில் தஞ்சை மண்டல பொறுப்பாளர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, பாமக மாவட்ட தலைவர் பழனிச்சாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் துரைமுத்து, பாமக நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பூத்தா அருள்மொழி கூறியதாவது ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேர் வீசப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு மக்களுடைய வெறுப்பு தான் காரணம் பொன்முடி மட்டும் இன்றி இந்த அரசாங்கமும் அமைச்சர்களும் செய்கின்ற அளவுக்கு மீறிய விளம்பரமும் அளவுக்கு மீறிய தற்பெருமையும் தான் அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பை மூட்டுகிறது அந்த வெறுப்பின் வெளிப்பாடு தான் அமைச்சர் பொன்முடி மீது சேர் வீசப்பட்டதற்கான காரணம் என்றார். சிக்கலான இந்த நேரத்தில் எங்களுடைய அமைச்சர்கள் செயல்பாடு மிக்கவர்கள் நல்ல அறிஞர்கள் என்று நாங்கள் சொல்ல வேண்டும் ஆனால் அதற்கு ஏற்றார் போல் அவர்களின் நடவடிக்கை இல்லை இவர்கள் அரசாங்கம் நடத்துகிறார்களா அல்லது விளம்பர கம்பெனி நடத்துகிறார்களா என்று தெரியவில்லை.

பாமகவை பொறுத்தவரை மக்களை அணி திரட்டுவதே முக்கியம். விழிப்புணர்வு கொண்டவர்களாக மக்களை மாற்றுவது தான் எங்களது நோக்கம். இந்த அரசாங்கம் தன்னியை திறந்து விட்டு விட்டு மழையில் நனைந்து கிடக்கும் மக்களிடம் வேட்டியையும் சேலையையும் தருவது அரிசி தருவது சாப்பாடு தருவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது சாப்பாட்டுக்கு வழி இல்லாதவர்களாகவா இருக்கிறார்கள் இந்த நாட்டு மக்கள். இவர்கள் நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறார்கள் அதையெல்லாம் மாற்றி அவர்களுக்கு நிரந்தர தீர்வு கண்டால் எவ்வளவு நல்லதாக இருக்கும்.

மேலும் 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி சேர்வது குறித்த கணக்கிற்கு நாங்கள் செல்லவில்லை வெற்றிகழகமோ அல்லது அது வியாபார கழகமோ வேறு எந்தெந்த கழகம் இருக்கிறது என்று தெரியவில்லை புதுசு புதுசா கழகங்கள் வருது அந்த கட்சிகளோடு கூட்டணி சேருவதை எல்லாம் நாங்கள் விரும்பவில்லை எங்கள் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கின்ற உணர்விலே ஒருங்கிணைக்கும் சக்தியாக நாங்கள் இப்பொழுது இருக்கின்றோம் என்றார்..

What do you think?

அரசு பேருந்து மோதியதில் சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் உடல் நசுங்கி பலி

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை சிறப்பு இரவு ஆரத்தி