in

மயிலாடுதுறை கருங்குயில்பேட்டை – ஸ்ரீ ஐயனார் ஆலயம் மகாகும்பாபிஷேகம்

மயிலாடுதுறை கருங்குயில்பேட்டை – ஸ்ரீ ஐயனார் ஆலயம் மகாகும்பாபிஷேகம்

 

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம் ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கருங்குயில் நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பூர்ணாம்பாள் புஷ்கலாம்பாள் சமேத ஶ்ரீ அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய நீர் கடங்களில் வைக்கப்பட்டு யாகசாலை வேள்விகள் நடைபெற்றது.

நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து மேளதாளங்கள் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா

தமிழை நம்பி மோசம் போட்டேன்.. மலையாள சூப்பர் ஸ்டாரிடம் தஞ்சம் புகுந்த கௌதம் மேனன்