ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான மாயூரம் வழக்கறிஞர்கள் தேர்தல் முடிவுகள்
மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன, வெற்றி பெற்றவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கே மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட எட்டு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது.
மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் தலைவர் செயலாளர் பொருளாளர் இணை செயலாளர் துணைத் தலைவர் ஆகிய ஐந்து பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.
இணை செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் போட்டியின்றி தேர்வான நிலையில் மீதமுள்ள மூன்று பதவிகளுக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற்றது 221 வழக்கறிஞர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
காலை துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 80 வயதைக் கடந்த மூத்த வழக்கறிஞர்கள் தகுந்த துணையுடன் வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
200 வாக்குகள் பதிவான நிலையில் 117 வாக்குகளைப் பெற்று காந்தி என்பவர் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 123 வாக்குகளைப் பெற்று பிரபு செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர்களது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு ஆண்டுக்கு பதவியில் தொடர்வார்கள்.