in

வசூல் சாதனை படைத்த எம்பூரான்

வசூல் சாதனை படைத்த எம்பூரான்

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்பூரான் திரைப்படம் மார்ச் 27 அன்று வெளியானது.

‘L2: எம்பூரான்’, திரைபடம் சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது, சில பார்வையாளர்கள் சித்தாந்தங்களை இழிவுபடுத்தும் ஒரு அரசியல் சாயலை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

ஒரு சிலர் இயக்குனர் பிருத்விராஜ் மோகன்லாலையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டதாகக் கூறினர்., “மோகன்லால் நடித்த ‘எம்பூரான்’ திரைப்படம், இந்தியா உட்பட துணைக் கண்டம் முழுவதும் இந்துக்கள் மீது நடந்து வரும் இனப்படுகொலைக்கு மத்தியில், இந்துக்களை வில்லன்களாக சித்தரித்து, இந்துக்களை அவமதிக்கும் படம் என்று தன்னை வெளிப்படுத்தியுள்ளது”

விமர்சனங்களை தாண்டி எம்பூரான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி இருக்கிறது. எம்பூரான் வெளியாகி முதல் நாள் மட்டும் 22 கோடி வசூல் செய்திருக்கிறது. உலக அளவில் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

What do you think?

போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆட்டோவில் தப்பித்து ஓடிய சியான்