நயன்தாராவிற்கு பதிலடி கொடுத்த மீனா
மூக்குத்தி அம்மன் 2′ படத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட நடிகை மீனாவை நடிகை நயன்தாரா அவமதித்ததாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, மீனா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். கதாநாயகிக்கு முக்கிய துவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
அந்த வகையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சமீபத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இதற்காக 1 கோடி செலவு செய்து’ சிறப்பாக ஒரு செட் அமைத்தார்.
முதல் முறையாக, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு நேரடியாக நடைபெற்றது. அப்படி படமாக்கப்பட்ட இந்தக் காட்சி படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது. ‘மூக்குத்தி அம்மன் 2’ பூஜையில் இயக்குனர் சுந்தர் சி மற்றும் நயன்தாரா தவிர, மீனா, குஷ்பு, ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ஐசரி கணேஷ், ஹிப்ஹாப் ஆதி, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்சியில் நடிகை மீனா…வை நயன்தாரா அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்கலை கொடுத்தவர் மீனா. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக பல படங்களில் நடித்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் 2′ நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது நயன்தாரா மீனாவிடம் ஹாய் கூட சொல்லவில்லை. குஷ்புவும் மீனாவும் ஒன்றாக மேடைக்கு வந்தனர். அப்போது, குஷ்புவை கட்டிப்பிடித்த நயன்தாரா, மீனாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் சிரிக்கக்கூட இல்லை. இதன் காரணமாக, நயன்தாரா….வின்’ இந்த செயலை பலரும் விமர்சித்தனர்.
மீனா நயன்தாராவுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார். தனது இன்ஸ்டா போஸ்ட்டில் நிறைய ஆடுகளுடன் கூடிய சிங்கத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், எப்போதும் தனியாக இருக்கும் சிங்கம், ஆடு தன்னைப் பற்றி என்ன நினைக்கிறது அல்லது என்ன சொல்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், நல்ல இதயத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், பெருமைப்பட வேண்டும் என்று கூறி மற்றொரு பதிவையும் அவர் பதிவிட்டுள்ளார்.