மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்-நள்ளிரவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி சாமி தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகுசிறப்பக நடைபெற்றது.
இதை முன்னிட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர் ,இளநீர், தேன், உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து அங்காளம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இரவு 11.00 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, அங்காளம்மா தாயே, அருள் புரிவாயே என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலத்தில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
தை மாதம் அமாவாசை என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.