in ,

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிமாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிமாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்…….

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆடிமாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் இளநீர் தேன் உள்ளிட்டபூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து அங்காளம்மனுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இரவு 11.00 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் ஆதிசக்தி அங்காளி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா தயே…அருள் புரிவாயே… என கொட்டும் மழையிலும் அம்மனை சுமார் 2 மணி நேரம் மழையில் காத்திருந்து நனைந்தபடியே சாமி தரிசனம் செய்தனர்.

கொட்டும் மழையின் காரணமாக ஒரு மணி நேரம் நடக்க வேண்டிய ஊஞ்சல் உற்சவம் 15 நிமிடத்திலேயே முடிவடைந்தது

இதையடுத்து இரவு 11.20மணிக்கு உற்சவர் அங்காளம்மனைகோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம்,வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாட்டினை திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழுத்தலைவர் சுரேஷ்பூசாரி உடன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும் மேலாளர் மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

What do you think?

கங்கனா ரனாவத் பங்களா விற்பனை

செஞ்சி ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.