in Spiritual, Tindivanam
மேல்பேரடிக்குப்பம் ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
மேல்பேரடிக்குப்பம் ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அம்மச்சார் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார்.
பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு புனித நீர் தெளித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள், ஆதிபராசக்தி செவ்வாடை தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.