in

சென்னைக்கு அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி கோரிக்கை


Watch – YouTube Click

சென்னைக்கு அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி கோரிக்கை

 

தஞ்சாவூரிலிருந்து – சென்னைக்கு பகலில் புதிய அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும். தஞ்சையிலிருந்து – அரியலூருக்கும், தஞ்சையிலிருந்து – பட்டுக்கோட்டைக்கும் புதிய ரயில் பாதை அமைத்திட வேண்டும் தஞ்சை ரயில் நிலையத்தில் 23 கோடி ரூபாய் நிதியில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த தென்னக இரயில்வே பொதுமேலாளரிடம் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வலியுறுத்தல்:

தஞ்சை ரயில் நிலையத்தில் 23 கோடி ரூபாய் நிதியில் நடைபெறும் பல்வேறு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தஞ்சை எம்.பி முரசொலி உள்ளிட்ட ரயில்வே அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளைத் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு செய்தார்

அப்போது, பொது மேலாளரிடம் தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கோரிக்கை மனு அளித்தார்.

தஞ்சாவூர் – சென்னை இடையே புதிய அதிவிரைவு ரயில் வசதியைத் தொடங்க வேண்டும்.

திருச்சி – திருவனந்தபுரம்,

திருச்சி – பாலக்காடு ஆகிய விரைவு ரயில்களை தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.

அரியலூர் – தஞ்சாவூர்

தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை, மன்னார்குடி பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய மூன்று புதிய ரயில் வழித் தடங்களை உடனடியாக தொடங்க வேண்டும்.

சென்னை காரைக்குடி இடையிலான கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்குவதற்கும்,

தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயிலை வாரத்துக்கு 7 நாட்களும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முரசொலி வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் விஜய், தி.மு.க., சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க, பா.ஜ , ஆதரவும் வளரும் அண்ணாமலை பேட்டி

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் தொழிலாளர் கட்சி சார்பில் வெற்றி