மாநாட்டில் மறைந்த உறுப்பினர்கள்…இரங்கல் தெரிவிக்காத விஜய்…கொந்தளித்த தொண்டர்கள்
தளபதி விஜய்யின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது .அரசியல் பின்புலமும் பக்குவமும் இல்லாத இவரால் என் என்ன செய்துவிட முடியும் என்று கேட்ட பலரும் வாய் பிளக்கும் படி பிரம்மாண்டமாக தனது முதல் மாநாட்டை நடத்தி முடித்தார்.வழக்கம் போல குட்டி story சொல்லி மக்களை மெர்சல் ஆகினார்.
ஒரு மனிதன் எல்லோரையும் எல்லாவற்றியும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்திட முடியாது. விஜய் ஒரு சில விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார். பலரும் அந்த சம்பவங்களை highlight பண்ணி சர்ச்சையாகி வருகிறார்கள். மாநாட்டில் பங்கு பெற பல மாவட்டங்களில் இருந்தும் 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் வந்திருந்தனர். மாநாட்டிற்கு வந்த சில தொண்டர்களும் பரிதாபமாக மறித்தனர். மாநாட்டிற்கு வீசாலையை’ நோக்கி வரும் பொழுது தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் சீனிவாசன், உதயகுமார் ,வசந்த் குமார் மற்றும் சார்லஸ் ஆகியோர் விபத்தின் காரணமாக மறைந்தனர் .
இந்த செய்தி மக்களிடையே கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்திய நிலையில் மாநாடு முடிந்து ஒரு நாள் ஆகியும் விஜய் இரங்கல் செய்தி தெரிவிக்காதது தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொண்டர் ஒருவர் 24 மணி நேரமாகியும் ஒரு ஆறுதல் செய்தி கூட வரவில்லை எங்களுக்கு குறுஞ்செய்தியாவது அனுப்பி இருக்கலாம்.
பணமோ அல்லது எங்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை ஆறுதலாக ஒரு வார்த்தை கூறினால் போதுமே என குற்றம் சாட்டினர். மேலும் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கின்றனர். கட்சிக்காக நாங்கள் உழைத்ததற்கு இதுதான் எங்கலுக்கு கிடைத்த பலனா என்று ஆதங்கத்துடன் கூடியிருக்கின்றனர் . மேலும் இந்த மாநாடு எதிர்பார்த்ததை விட successfull….லாக முடிந்ததற்கு பலர் உழைத்து இருகின்றனர், மாநாடு முடிந்தவுடன் அவர்களுக்கு நன்றி கூட சொல்ல வில்லை விஜய். உழைத்தற்கு உதியம் மட்டும் போதுமா தட்டிகொடுக்க கை வேண்டாமா என்று உறுப்பினர்கள் ஆதாங்கதை கொட்டி இருகின்றனர்.
இவர்களின் இந்த பதிவையும் பலரிடம் வந்த எதிர்ப்புக்குப் பிறகு விஜய் 8 மணி அளவில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்க வந்த தோழர்கள் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது என்னுடைய சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.