மெட்ரோ கட்டணம் அதிரடி உயர்வு
முத்துக்களின் நகரம் என்று அழைக்கப்படும் ஹைதராபாத், தெலங்கான மாநிலத்தின் தலைநகராக உள்ளது . ஹைதராபாத் நகரில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப துறையின் தலைசிறந்த நகரமாகவும் ஹைதராபாத் திகழ்ந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த ஏராளமான மக்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக மேட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவையை நம்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்நிலையில் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
10 சதவீத கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.59 விடுமுறை அட்டையை (Holiday Card) முழுமையாக ரத்து செய்யவும் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது . விடுமுறை அட்டை பயனர்கள் தினசரி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை எல்லா நேரங்களிலும் பயணிக்க பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த கார்டை ரத்து செய்யும் ஹைதராபாத் மெட்ரோவின் முடிவு, இந்த கார்டுகளை பயனற்றதாக்கியுள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். மெட்ரோ பயணக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் அலுவலகத்திற்குச் செல்ல மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் தினசரி பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.