in

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான நிலடுக்கம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான நிலடுக்கம் : அரசின் SEISMO இணையத்தில் பதிவாகவில்லை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இன்று காலை பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம், உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வை பொது மக்கள் உணர்ந்தனர்.

வீடுகள் லேசான சப்தத்துடன் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பலகிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து தற்போது வரை அரசின் SEISMO இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வரபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுவரை யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்பட்டதாக அதிகார பூர்வ தகவல் இல்லை.

ஆன போதிலும் நில அதிர்வுகள் உணரப்பட்ட இடங்களில் கள அலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

What do you think?

மன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் வாலிபர் ஒருவரின் பூணூலை அறுத்த விவகாரம்