in

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மினி மாரத்தான் ஓட்டம்

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மினி மாரத்தான் ஓட்டம்

 

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் நடைபெற்ற தேனி மாரத்தான் போட்டியை ஹரிஹரன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சீனிவாசன் தேசிய பசுமை படை மற்றும் மயிலாடுதுறை நகராட்சி இணைந்து மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட ஆடவர் மற்றும் பெண்கள் என்று தனித்தனியே சஞ்சய் போட்டிகள் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் எதிரே துவங்கிய ஆண்களுக்கான போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெண்களுக்கான பிரிவு போட்டியை கோட்டாட்சியர் திருமதி அர்ச்சனா துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியே நடைபெற்ற மாரத்தான் போட்டி மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

மாரத்தான் போட்டியை தொடர்ந்து காவல்துறையினர் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

What do you think?

 சுடு களிமண் பொம்மைகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை