in

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

 

தஞ்சையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை சத்யா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்து கேரம் போர்டு விளையாடி தொடங்கி வைத்ததோடு வாலிபால் சர்வீஸ் செய்து போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

பின்பு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற் அழைப்பு விடுத்ததோடு திமுகவிற்கு எதிராக செயல்படுவதாக கேட்டதற்கு இதற்கு அந்தத் துறையின் அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

அவருடைய கருத்துக்களை வலியுறுத்தி விழிப்புணர்வை கொண்டு வருகிறார் இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கேட்டதற்கு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேசியிருக்கிறோம் 31 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அதையும் மீறி அவர்களுடைய உரிமைகளை சொல்லி இருக்கிறார்கள்.

கண்டிப்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம் நல்ல முடிவு எடுக்கப்படும்.

மகாவிஷ்ணு பேசியது போலவே இன்னொரு அமைச்சர் பேசி இருப்பதாக கூறியதற்கு அதை நான் பார்க்கவில்லை மகாவிஷ்ணு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தெரிவித்தார்.

What do you think?

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா பிட்டுக்கு மண் சுமந்த லீலை