நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தஞ்சை மாவட்டம் , கோ.வல்லுண்டான்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 38 லட்சம் மதிப்பீட்டில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணி நிறைவடைந்து இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அவர்கள் ;
தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன். மேலும் தேர்வு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்வு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அரசு பள்ளிகளில் அம்மானவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்கள் கடத்தப்பட்டதாக வந்த வதந்தியை நிஜமாக்க வேண்டாம் என்றும் குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டு கொண்டார்.வதந்திகளை பரப்புபவர்கள் யார் என்று கண்டறிய தனியாக துறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.