வேதாரண்யம் அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்யும் பணியினை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பில் மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கி பாடம் எடுத்தார். பின்னர் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களிடம் பள்ளியின் தேர்ச்சி விகிதம், ஒழுக்க கட்டுப்பாடு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மாணவ மாணவிகள் அமைச்சரிடம் ஆட்டோகிராப் கேட்டனர். அனைவருக்கும் அன்புடன் ஆட்டோகிராப் போட்டார். பின்னர் பள்ளியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் பள்ளி வளாகம் தூய்மை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தானியலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைப்போல் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் இல்லம் மற்றும் அவர் படித்த தொடக்கப் பள்ளியையும் ஆய்வு செய்தார்.