in

கனமழை எதிரொலியால் 12 முகாம்களில் 934 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பு மகேஷ் நாகையில் பேட்டி

கனமழை எதிரொலியால் 12 முகாம்களில் 934 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பு மகேஷ் நாகையில் பேட்டி

கனமழை எதிர்ரொலி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 68 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன இந்த நிலையில் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நகராட்சி நடுநிலை பள்ளியில் சூர்யா நகர் பகுதியை சேர்ந்த 60 குடும்பத்தினர் 110 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் அவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்

மழையால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பிரட், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் நாகப்பட்டினத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் அதன்படி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தேவைப்பட்டால் முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிக்கப்படும் முதன்மை கல்வி அலுவலர் அந்தந்த பள்ளிகளின் பள்ளிகளில் சாவிகளை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்துள்ளனர் கனமழை பெய்தால் பொதுமக்கள் தங்கும் இடங்களை தேடி அலையாமல் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பெற்று அந்த முகாம்களில் தங்கிக் கொள்ளலாம் மேலும் இதுவரை 12 முகாம்களில் 934 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 20% ரேஷன் பொருட்கள் அங்காடிகளில் இறப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5800 ஏக்கரில் சம்பா பயிர்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது மழை விட்டு விட்டு பெய்வதால் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் எடுத்துக் கொண்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் காலையில் கூட முதலமைச்சரிடம் போனில் பேசி மழை பாதிப்புகள் குறித்த நிலவரத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

What do you think?

நாகையில் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடல் அலைகள் சுமார் 3 அடி உயரத்திற்கு சீற்றத்துடன் காணப்படுகிறது

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர திரு பவித்ரோத்ஸவ விழா