கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழாவில்அமைச்சர் சக்கரபாணி பதிலடி
கரூர் வந்த அண்ணாமலை திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை விடுவாரா என கேள்வி எழுப்பினார் – திமுக ஆட்சியில் செய்த திட்டங்கள் எண்ணற்றவை என பட்டியலிட்டு அமைச்சர் சக்கரபாணி அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.
கரூர் பேருந்து நிலையம் அருகில் இந்தியா கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி தேர்தல் பணி மனையை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி,
கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறை 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயாரை பார்த்து கை நீட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர்.
தமிழகத்தில் கடந்த 34 மாதங்களில் ஏராளமான சாதனை திட்டங்களை தமிழக முதல்வர் செய்துள்ளார். இந்த சாதனைகளை எடுத்து கூறி மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்போம்.
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை 4.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழக முதல்வர் ஏராளமான தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வரியாக 1 ரூபாய் பெறும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வெறும் 28 பைசா மட்டுமே கொடுக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கு அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.
தமிழக முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி உள்ளது. 40 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
நேற்று கரூர் வந்த பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த தேர்தலில் 511 தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றியதாக முதல்வர் கூறுகிறார். வெள்ளை அறிக்கை விடுவாரா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அரசு திட்டங்களை பட்டியலிட்டார்.
கொரோனா காலத்தில் அனைத்து மக்களுக்கும் முதல்வர் 4000 ரூபாய் வழங்கினார். பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்தில் 445 கோடி பயணம் நடந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர்கள் பயனடைந்துள்ளனர்.
தமிழத்தில் 31 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 17 லட்சம் பேர்கள் பயடைந்துள்ளனர்.இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 2 லட்சம் உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.
தேர்தலில் சொன்ன திட்டங்களை செய்தும் சொல்லாத திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளார் தமிழக முதல்வர் என பட்டியலிட்டார்.