in

நாகையில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் பயிலும், அன்னை சத்யா காப்பகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

நாகையில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் பயிலும், அன்னை சத்யா காப்பகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு; குழந்தைகளுக்கு சமைத்த சாம்பாரை சுவைத்தவர் பள்ளி குழந்தைகளுக்கு, கல்வியும், உணவும் சிறப்பாக உள்ளதாக அமைச்சர் பாராட்டு;

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் இன்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த அமைச்சர் கீதா ஜீவனுக்கு பள்ளி சிறுமிகள் உருவாக்கிய கைவினைப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அங்கு பயின்று வந்த மாணவியர்களை சந்தித்து அமைச்சர் கீதா ஜீவன் காலையில் தங்களுக்கு என்ன உணவுகள் வழங்கப்பட்டது என கேட்டறிந்தார். அப்போது கூறிய மாணவிகள், பூரி கிழங்கு , கேசரி என அடுக்கினர்.

அதனைத் தொடர்ந்து தமிழ் எழுத்துக்களையும், ஆங்கில எழுத்துக்களையும் ஸ்லேட்டில் எழுதி காட்டுங்கள் என அமைச்சர் கேட்டார். அதில் ஒரு மாணவி சிலேட்டில் அழகாக ஆனா… ஆவன்னா… தமிழ் எழுத்துக்களையும் ஏபிசிடி… என ஆங்கில எழுத்துக்களையும் அற்புதமாக எழுதி காட்டினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சமைக்கப்படும் உணவுகளை அமைச்சர் கீதா ஜீவன் சிறிது சாப்பிட்டு அதன் தரமும் சுவையும் பிரமாதமாக இருப்பதாக கூறினார். மேலும் நாள்தோறும் இதே சுவையுடன் மாணவ மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்படுகிறதா? எனவும் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் பயிலும் அன்னை சத்யா காப்பகத்தில் மாணாக்கர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் கல்வியும், உணவும் சிறப்பாக உள்ளதாக அவர் பாராட்டினார்.

பின்னர் அன்னை சத்யா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களை சந்தித்து அவர்களின் நலன் குறித்தும் கேட்டறிந்தார். அவர்களிடம் சிறிது நேரம் அமைச்சர் கீதா ஜீவன் பேசியபோது மூதாட்டி ஒருவர் அந்த இடத்தை அமைச்சர் முன்னிலையில் கலகலப்பாக்கி கலந்துரையாடினார்.

முன்னதாக காடாம்பாடி அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் குழந்தைகளை பாடல் பாட சொல்லி மகிழ்ந்தார் தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தார்

ஆய்வின்போது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, நாகை சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

What do you think?

நாகையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

படங்களை ஹிந்தியில் டப் செய்ய கூடாது