வட கிழக்கு மருவ மழை எந்த ரூபத்தில் வந்தாலும் அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளது என பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்த பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர ராமச்சந்திரன் பேட்டி…
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை . 47 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையானது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகவும் கருதப்படுகிறது . இந்த அணையை நம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ள கொடிக்குளம் , பெரியகுளம், விராடசமுத்திரம், பூரிபாறைகுளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாயிகளுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது
இந்த அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அணையின் நீர்மட்டம் 37 அடியாக உள்ளது .இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். வினாடிக்கு 150 கன அடி நீர் வீதம் இன்று 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டேட்டி அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பிளைக்கல் பெரியார் அணை பூங்காவை சீரமைக்க 10 கோடி தமிழட முதல்வர் ஒதுக்கிய நிலையில் விரைவில் பணிகள் துவங்கும் என தெரிவித்தார்
வடகிழக்கு பருவமழை எந்த ரூபத்தில் வந்தாலும் அரசு எதிர் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், மழை தான் வரவில்லை எனவும் தெரிவித்தார்.